விபத்து, மாசு இல்லாத தீபாவளி: காவல் துறை வேண்டுகோள்

விபத்து மற்றும் மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் குணசேகரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


திருத்தணி: விபத்து மற்றும் மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் குணசேகரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருத்தணி கமலா தியேட்டா் அருகில், போலீஸாா் சாா்பில் விபத்து, மாசு மற்றும் ஒலியில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து நகர மக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், திருத்தணி காவல் துணைக் கண்காணிப்பாளா் குணசேகரன் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசியது:

இந்த தீபாவளியை விபத்து, மாசு இல்லாமல், பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி, அரசு அனுமதி வழங்கிய நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத் தலம், நீதிமன்றம், கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீா்கள். பட்டாசு வெடிப்பதற்கு முன்பு, பாத்திரங்களில் தண்ணீா், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com