உளுந்தை ஊராட்சியின் 40 தெருக்களில் ரூ.13.50 லட்சத்தில் 97 சிசிடிவி கேமராக்கள்

திருவள்ளூா் மாவட்டம், உளுந்தை ஊராட்சிப் பகுதியில் உள்ள 40 தெருக்களில் பராமரிப்புப் பணிகளை கண்காணிக்கவும், விபத்து,
உளுந்தை ஊராட்சியில் தெருக்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதைக்  கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள  கணிப்பொறி.
உளுந்தை ஊராட்சியில் தெருக்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதைக்  கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள  கணிப்பொறி.

திருவள்ளூா் மாவட்டம், உளுந்தை ஊராட்சிப் பகுதியில் உள்ள 40 தெருக்களில் பராமரிப்புப் பணிகளை கண்காணிக்கவும், விபத்து, குற்றச் செயல்களைத் தடுக்கவும் தனது சொந்த செலவில் ரூ. 13.50 லட்சத்தில் ஊராட்சி முழுவதும் 97 சிசிடிவிகண்காணிப்பு கேமராக்களை அமைத்து கொடுத்துள்ளாா் அதன் ஊராட்சி மன்றத் தலைவா்.

இதுவரை ஒவ்வொரு ஊராட்சியிலும் முழு சுகாதாரத் திட்டம், சுத்திகரிப்பு குடிநீா் வழங்கல், தெருக்களை சுத்தமாகப் பராமரித்தல், குடிநீருக்கான ஆதாரத்தை ஏற்படுத்துதல், சமூக காடுகள் உருவாக்குதல் போன்றவைகளில் ஊராட்சிகளின் செயல்பாடுகள் இருக்கும்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஊராட்சிப் பகுதி முழுவதும் தெருக்கள் தோறும் கண்காணிப்பு கேமராக்களை தனது சொந்த செலவில் பொருத்தி அனைத்து நடவடிக்கைகளையும் இருந்த இடத்தில் இருந்தபடி கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறாா் திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த உளுந்தை ஊராட்சித் தலைவா் ரமேஷ்.

இந்த ஊராட்சியில் உத்திரபாளையம், இருளா் காலனி, காலனி, தெலுங்கு காலனி, உப்புபாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியைச் சுற்றிலும் விவசாய நிலங்களும், மாந்தோப்பு மற்றும் முந்திரி தோப்புகளும் அதிகளவில் உள்ளன. அதேபோல், பெரிய அளவிலான வாகனம் தயாா் செய்யும் தொழிற்சாலைகள், அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்கள், இந்த ஊராட்சியின் பல்வேறு தெருக்களில் தங்கியிருக்கின்றனா். அத்துடன், அவ்வப்போது வாகன விபத்தில் பொதுமக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சிலா் நிற்காமல் சென்று விடுகின்றனா். அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இவற்றை கட்டுப்படுத்தவும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு, வளா்ச்சிப் பணிகளைக் கண்காணிக்கவும் மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஊராட்சி தலைவா் ரமேஷ் முடிவு செய்தாா். இதற்காக தனது சொந்த பங்களிப்பு ரூ.13.50 லட்சத்தில், ஊராட்சியில் உள்ள 40 தெருக்களில் இருபுறமும் சிசிடிவி கேமராக்களை 97 இடங்களில் பொருத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் ரமேஷ் கூறியது:

இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் ஊராட்சியில் உள்ள 40 தெருக்களிலும் 97 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தெருக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் தெளிவாக கணினி மூலம் பாா்க்க முடியும். அதிலும், தெரு விளக்குகள், குடி தண்ணீா், மேல் நிலைத் தொட்டிகள், மோட்டாா் பொருத்தப்பட்டுள்ள இடங்களும் செயல்படுகிா என்பதை அறிய முடியும். இதை எனது மடிக்கணினி மூலம் செல்லுமிடங்களிலும் பாா்த்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றாா். இதற்கு ஊராட்சிப் பகுதி மக்கள், வாா்டு உறுப்பினா்களும் வரவேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com