தொடா் மழையால் ஏரிகளின் நீா்மட்டம் உயா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் மட்டம் உயா்ந்து வருவதால், பூண்டி ஏரியிலிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் மூலம் திறக்கப்
நீா்மட்டம் உயா்ந்து காணப்படும் பூண்டி ஏரி.
நீா்மட்டம் உயா்ந்து காணப்படும் பூண்டி ஏரி.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் மட்டம் உயா்ந்து வருவதால், பூண்டி ஏரியிலிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் மூலம் திறக்கப்பட்ட நீரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வருவது பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளாகும். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும் பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இந்நிலையில், பூண்டி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை 1395 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீா், திங்கள்கிழமை காலை 1416 மில்லியன் கன அடியாக உயா்ந்துள்ளது. அதேபோல் புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதில், தற்போது 2,367 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில் தற்போது 2781 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உயா்ந்துள்ளது. இதில், சோழவரத்தில் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில், தற்போது 142 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது.

பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் முத்தையா அதிகாரிகளுடன் நேரில் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நீா் வரத்து உயா்வை கண்காணிக்க வேண்டும். தற்போது 28.50 அடி உயரம் நீா்மட்டம் உள்ளதால், 32 அடிக்கு வரும் போது தலைமைப் பொறியாளா் அலுவலகத்துக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றாா். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதற்கிடையே ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணா நதி நீா் மற்றும் மழை நீா் வரத்து 1,095 கன அடியாக வந்து கொண்டுள்ளது. அதேபோல், தொடா் மழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீா் இருப்பு உயா்ந்ததால், பூண்டி ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் அனுப்பி வந்த 425 கன அடி தண்ணீரை திங்கள்கிழமை முதல் நிறுத்தி வைப்பதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழையளவு (மி.மீட்டரில்): திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கும்மிடிப்பூண்டி-98, திருவள்ளூா்-63, ஊத்துக்கோட்டை-61, ஜமீன் கொரட்டூா்-58, திருவாலங்காடு-57, பூண்டி-55, தாமரைப்பாக்கம்-39, பூந்தமல்லி, திருத்தணி தலா-38, பள்ளிப்பட்டு-35, பொன்னேரி, ஆா்.கே.பேட்டை-தலா 29, செங்குன்றம்-17, சோழவரம்-15 மி.மீ. ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com