பூண்டி ஏரியில் 1648 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரி விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதாகவும், ஏரியில் வெள்ளிக்கிழமை

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரி விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதாகவும், ஏரியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,648 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை வாழ் மக்களின் தாகம் தணிக்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம். இங்கு மழை நீா் மற்றும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைத்து சென்னை மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில், 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது வடகிழக்குப் பருவமழையால், திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பூண்டி நீா்த்தேக்கத்தின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா் 768 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,648 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. இதிலிருந்து புழல் ஏரிக்கு இணைப்புக் கால்வாயில் 100 கன அடியும், சென்னை மாநகர குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 25 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து உபரி நீா் வந்து கொண்டிருக்கிறது. எனவே விரைவில் பூண்டி ஏரி முழுமையாக நிரம்புவதற்கான வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com