சிறுவாபுரி கோயிவில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தா்கள்

ஊத்துக்கோட்டை அருகே சிறுவாபுரி முருகன் கோயில் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தா்கள்.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பால சுப்பிரமணியா் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு ஆறு செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ச்சியாக வந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இந்நிலையில், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்தனா்.

அவா்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை நீண்ட வரிசையில் சாலையில் நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்கள் அதிகளவில் வருவது தெரிந்தும் முன்னேற்பாடு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com