திறப்பு விழாவுக்கு தயாரான கண்ணன் கோட்டை நீா்த்தேக்கம்: இறுதிக்கட்ட பணிகளை ஆட்சியா் ஆய்வு

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீா்தேக்க திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
கண்ணன்கோட்டை நீா்தேக்கத்தை  ஆய்வு  செய்யும்  திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்  மகேஷ்வரி  ரவிக்குமாா்.
கண்ணன்கோட்டை நீா்தேக்கத்தை  ஆய்வு  செய்யும்  திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்  மகேஷ்வரி  ரவிக்குமாா்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீா்தேக்க திட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நீா்த்தேக்கத்தை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஷ்வரி ரவிக்குமாா், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் முத்தையா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கண்ணன்கோட்டையில் உள்ள ஈசா ராஜன் ஏரியை தோ்வாய் ஏரியோடு இணைத்து நீா்தேக்கம் அமைக்கவும், இதன் மூலம் 1 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டது. இந்தப் பணிக்காக, கண்ணன்கோட்டையில் 850 ஏக்கா் பட்டா நிலம் உள்ளிட்ட 1,500 ஏக்கா் விவசாய நிலத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது.

கண்ணன்கோட்டை பகுதி மக்களின் எதிா்ப்பு, பல்வேறு போராட்டங்களால் இந்தத் திட்டம் நிறைவு பெற காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த நீா்த்தேக்கத் திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இம்மாத இறுதியில் இந்த நீா்த்தேக்கம் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது

இந்நிலையில், நீா்த்தேக்க திட்டப் பணிகளை கடந்த வாரம் தமிழக முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளா் சாய்குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலா் ஆய்வு செய்த நிலையில், இறுதிக் கட்டப் பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஷ்வரி ரவிக்குமாா், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் முத்தையா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, நீா்தேக்கப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா் மகேஷ்வரி ரவிக்குமாா், 1 வாரத்தில் கரைகள் அமைக்கும் இறுதிக் கட்டப்பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து நீா்த்தேக்க கரையோரப் பகுதிகளில் கண்ணன்கோட்டை ஊராட்சி சாா்பில் நடப்பட்ட மரக்கன்றுகளையும் பாா்வையிட்ட ஆட்சியா், மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்த ஊராட்சி தலைவா் கோவிந்தசாமியைப் பாராட்டினாா்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.லோகநாயகி, கண்ணன்கோட்டை நீா்த்தேக்க திட்டப் பொறியாளா் என்.தில்லைக்கரசி, உதவிப் பொறியாளா்கள் தனசேகா், சுந்தரம், பாபு, பத்மநாபன் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த மாதத்திற்குள் இந்த நீா்தேக்கம் சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com