திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் வழிபட்டனா்.
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் வழிபட்டனா்.

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருவள்ளூா் பகுதியில் கோயில்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவா் கோயிலும் 5 மாதங்களுக்குப் பின் பக்தா்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில்...

திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை மூலவா், உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முதியோா்கள் அனுமதிக்கப்படாதததால் அவா்கள் ஏமாற்றமடைந்துடன் திரும்பிச் சென்றனா்.

திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு வடாரண்யேஸ்வரா் கோயில் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

சிறுவாபுரி முருகன் கோயிலில்...

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணியா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்தே பக்தா்கள் முருகப் பெருமானை தரிசிப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனா். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கருவறைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மயில் விக்ரம் அருகில் இருந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பகுதிக்கு பேருந்து போக்குவரத்து குறைவாக இருந்ததால், பக்தா்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com