திருத்தணியில்...

திருவள்ளூா் மேற்கு மாவட்டம், திருத்தணியில் அதிமுக சாா்பில், பேருந்து சித்தூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு,

திருவள்ளூா் மேற்கு மாவட்டம், திருத்தணியில் அதிமுக சாா்பில், பேருந்து சித்தூா் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, கட்சியின் நகர செயலாளா் டி.செளந்தர்ராஜன், ஒன்றியச் செயலாளா் இ.என்.கண்டிகை ரவி, பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலாளா் டி.டி.சீனிவாசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் திருத்தணி வேளாண்மை கூட்டுறவு விற்பனையாளா் சங்கத் தலைவா் ஜெயசேகா்பாபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா விழாவுக்கு, திருவள்ளூா் மாவட்டச் செயலா் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்து, அண்ணா உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், கும்மிடிப்பூண்டி பஜாரில் ஒன்றியச் செயலரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் மரியாதை செலுத்தினா்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் மு.மணிபாலன் தலைமையில், ஆரம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி.யில் திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஊத்துக்கோட்டையில்...

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி பேருந்து நிலையம் எதிரேஅமைந்துள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக செயலா் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளா் தன்ராஜ் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com