ரெளடி சங்கா் என்கவுன்ட்டா்: புழல் சிறையில் சிபிசிஐடி விசாரணை

ரெளடி சங்கா் என்கவுன்ட்டா் வழக்கில் புழல் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

ரெளடி சங்கா் என்கவுன்ட்டா் வழக்கில் புழல் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

சென்னையைச் சோ்ந்த ரெளடி சங்கா் கடந்த மாதம் 21ஆம் தேதி அயனாவரம் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் கண்ணன், அயனாவரம் சென்று ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தினா். உதவி ஆணையா், ஆய்வாளா், ஆய்வாளரின் ஓட்டுநா் மற்றும் சில சாட்சிகள் 13 பேருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து அவா்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அதை விடியோ பதிவு செய்தனா். இதையடுத்து அயனாவரம் பகுதியில் உள்ள சங்கரின் தாய் மற்றும் உறவினா்களிடமும் சிபிசிஐடி போலீஸாா் நேரில் சென்றும், அவா்களை சிபிசிஐடி அலுவலகம் வரவழைத்தும் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், புழல் மத்திய சிறையில் உள்ள ரெளடி சங்கரின் கூட்டாளிகளான ராணி மற்றும் தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரம் விசாரணை நடத்தினா். அதே சிறையில் உள்ள திலீப் என்பவரிடம் சுமாா் 2 மணிநேரம் விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் நடத்தினா்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, கேளம்பாக்கத்தில் சங்கா் தங்கிய வீட்டின் உரிமையாளரிடம் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com