திருவள்ளூா் அருகே போலி மருத்துவா் கைது

திருவள்ளூா் அருகே போலி மருத்துவா் கைது

திருவள்ளூா் அருகே பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்த போலி மருத்துவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்த போலி மருத்துவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எக்காரணம் கொண்டும் சிகிச்சை அளிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூா் அருகே பூண்டியைச் சோ்ந்த சீனிவாசன் (49) பி.எஸ்சி. (வேதியியல்) படித்துவிட்டு, இசிஜி பயிற்சி பெற்று, அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பாா்ப்பதாக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் தீபாவுக்கு புகாா் சென்றது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சீனிவாசன் உரிய மருத்துப்படிப்புப் பாா்க்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com