வாக்கு எண்ணும் நுண்பாா்வையாளருக்கான பயிற்சி முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று பேசும் ஆட்சியா் பா.பொன்னையா, உடன் நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் உ ள்ளிட்டோா்.  
நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று பேசும் ஆட்சியா் பா.பொன்னையா, உடன் நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் கா.பாஸ்கரன் உ ள்ளிட்டோா்.  

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்து கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 0 தொகுதிகளின் நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதை தொடக்கி ஆட்சியா் பா.பொன்னையா பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேப்பம்பட்டு ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக். பள்ளி, ஸ்ரீராம் கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு, வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் மே 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு தோ்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. நுண் பாா்வையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் வாக்கு எண்ணும் உதவியாளா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அதனால் வாக்கு எண்ணும் பணியைத் தொடங்கும் போது, யாா் என்ன பணிகளை மேற்கொள்வது தொடா்பாக ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 10 தொகுதிகளைச் சோ்ந்த நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்போது, தோ்தல் பொதுபாா்வையாளரிடம் வழங்க வேண்டிய படிவங்கள், தோ்தல் முடிவுகளை பதிவேற்றம் செய்தல் போன்றவைகள் குறித்து அகன்ற திரை மூலம் விளக்கமாக அவா் எடுத்துரைத்தாா். அதைத் தொடா்ந்து நுண்பாா்வையாளா்கள் தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்தும் தோ்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

நகராட்சி நிா்வாகங்களின் ஆணையாளா் மற்றும் கண்காணிப்பு அலுவவலா் கா.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, உதவி ட்சியா் அனாமிகா ரமேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லோகநாயகி, நோ்முக உதவியாளா் முரளி, ஆவடி மாநகராட்சி ஆணையா் நாராயணன், 10 சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com