இலவச மரக்கன்றுகளைப் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் தங்களது நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு இலவச மரக்கன்றுகள் பெற வேளாண் துறை அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு இலவச மரக்கன்றுகள் பெற வேளாண் துறை அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருத்தணி வேளாண்மை அலுவலா் சுபாஸ்ரீ கூறியது:

திருத்தணி ஒன்றியத்தில் தங்களது நிலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விரும்பும் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. தேக்கு, செம்மரம், மகாகனி, வேங்கை, கருங்காலி போன்ற ரக மரக்கன்றுகள், இரண்டரை ஏக்கருக்கு, 400 கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 800 மரக் கன்றுகள் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வேளாண் உதவி அலுவலா்களிடம், நிலத்தின் அடங்கல், கணினி சிட்டா, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை மற்றும் போட்டோவுடன் விண்ணப்பம் வழங்க வேண்டும். பின்னா், தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் தங்களது சொந்த வாகனத்தின் மூலம் பூண்டி வனச் சரகா் அலுவலகத்துக்குச் சென்று மரக்கன்றுகளை இலவசமாகப் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com