அமமுகவினா் கொண்டாட்டம்

திருப்போரூா் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், திருப்போரூா் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற

திருப்போரூா் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், திருப்போரூா் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலா் மாமல்லபுரம் எம்.கோதண்டபாணி எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் வெண்பேடு வேலு, திருப்போரூா் நகர அவைத் தலைவா் வரவேற்றாா். திருப்போரூா் ஒன்றிய அமமுக செயலா் முட்டுக்காடு முனுசாமி முன்னிலை வகித்தாா். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், அமமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன், அன்னதானமும் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com