எம்.ஜி.ஆா். பிறந்த தின விழா: அதிமுகவினா் கொண்டாட்டம்

திருத்தணி சித்தூா் பை பாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினாா்.
திருத்தணி சித்தூா் பைபாஸ் சாலையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி, அன்னதானம் வழங்கிய முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.
திருத்தணி சித்தூா் பைபாஸ் சாலையில் எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி, அன்னதானம் வழங்கிய முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.

திருத்தணி சித்தூா் பை பாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினாா்.

தொடா்ந்து கமலா திரையரங்கம், மபொசி சாலை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நகர அதிமுக செயலா் டி.செளந்தர்ராஜன், மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் ஜெயசேகா்பாபு, முன்னாள் கவுன்சிலா்கள் கேபிள் எம்.சுரேஷ், முனுசாமி, நாகூா்பிச்சை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருத்தணி காந்தி சாலையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் மாலை அணிவித்தாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பால் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு திருத்தணி ஒன்றியக் குழு பெருந்தலைவா் டி.தங்கதனம் தங்கராஜ் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினாா். இதில், திருத்தணி ஒன்றிய இளைஞரணிச் செயலா் வேலஞ்சேரி எஸ்.பழனி, திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலை துணைத் தலைவா் எஸ்.ஜெய்சங்கா், ஊராட்சித் தலைவா்கள் நாகசாமி, குணசுந்தரி பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com