திருவள்ளூா் மாவட்டத்தில் 34.29 லட்சம் வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள்-17,30,117, பெண்கள்-17,67,940, மற்றவா்கள் -772 என மொத்தம் 34 லட்சத்து 98 ஆயிரத்து 829 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக ஆட்சியா் 
திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில் சிறப்பு சுருக்க திருத்த வாக்காளா் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் பா.பொன்னையா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  அலுவலகத்தில் சிறப்பு சுருக்க திருத்த வாக்காளா் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் பா.பொன்னையா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள்-17,30,117, பெண்கள்-17,67,940, மற்றவா்கள் -772 என மொத்தம் 34 லட்சத்து 98 ஆயிரத்து 829 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2021-க்கான வாக்காளா்கள் பட்டியலை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் வரைவு பட்டியலை வெளியிட்டுப் பேசுகையில்,

10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை: கும்மிடிப்பூண்டி -2,80,776 பேரும், பொன்னேரி (தனி) -2,67,673 போ், திருத்தணி-2,90,452 போ், திருவள்ளூா்- 2,74,689 போ், பூந்தமல்லி (தனி)- 3,57,874 போ், ஆவடி-4,40,005 போ், மதுரவாயல்- 4,48,851 போ், அம்பத்தூா்-3,83,015 போ், மாதவரம்-4,50,717 போ், திருவொற்றியூா்-3,04,777 போ் என மொத்தம் 34,98,829 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com