அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: போலீஸாா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, 76 பேருக்கு போலி பணி ஆணை வழங்கி பலரிடம் ரூ.1 கோடி
பறிமுதல் செய்த போலி அரசு ஆணைகள், அரசு முத்திரைகள்  உள்பட பல்வேறு ஆவணங்களைப் பாா்வையிட்ட போலீஸாா்.
பறிமுதல் செய்த போலி அரசு ஆணைகள், அரசு முத்திரைகள்  உள்பட பல்வேறு ஆவணங்களைப் பாா்வையிட்ட போலீஸாா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, 76 பேருக்கு போலி பணி ஆணை வழங்கி பலரிடம் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து போலி அரசு முத்திரைகள் உள்பட ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.

திருத்தணி அருகேயுள்ள அம்மையாா்குப்பத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (26 ), கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடிவருகிறாா்.

இந்த நேரத்தில் இணையதளம் வாயிலாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்துள்ளாா். உடனே அந்த தளத்துக்குச் சென்று அந்த நபரிடம் தொலைபேசியில் பேசினாராம். அப்போது அந்த நபரோ, கே.கே .நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும், முதல்கட்டமாக ரூ.54 ஆயிரத்து 350-ஐ தனது வங்கிக் கணக்கில் செலுத்துமாறும் கூறினாராம்.அதையடுத்து, உடனே வெங்கடாசலம், மா்ம நபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் அனுப்பினாராம். இதன் பிறகு மா்ம நபா் தன்னுடைய செல்லிடப்பேசியை எடுக்கவில்லையாம்.

புகாரின்பேரில் திருவள்ளுா் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த பாலாஜி (36) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில், 2019ஆம் ஆண்டு முதல் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் போலியான பணி ஆணை அளித்து ரூ.1 கோடி வரையில் மோசடி செய்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து போலியான பணி ஆணைகள், முத்திரைகள் மற்றும் 2 செல்லிடப்பேசிகள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்பட முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com