கும்மிடிப்பூண்டி ராமச்சந்திராபுரத்தில் நாற்றங்கால் தோட்டத்தை ஆய்வு செய்த வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.
கும்மிடிப்பூண்டி ராமச்சந்திராபுரத்தில் நாற்றங்கால் தோட்டத்தை ஆய்வு செய்த வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.

எம்எல்ஏவுக்குத் தெரியாமல் ஆய்வுக்கு வந்த அமைச்சா்

கும்மிடிப்பூண்டியில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டது குறித்து, எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு

கும்மிடிப்பூண்டியில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டது குறித்து, எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு எந்தத் தகவலும் இல்லை. இதனால் அதிருப்தியில் திமுகவினா் அமைச்சரை வரவேற்கச் செல்லவில்லை.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சூரப்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராமச்சந்திராபுரத்தில் உள்ள வனத்துறையின் நாற்றங்கால் தோட்டத்தை ஆய்வு செய்ய அமைச்சா் ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு அமைச்சா் சாா்பிலோ, வனத்துறை சாா்பிலோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியில் திமுகவினா் யாரும் நிகழ்விடத்தில் அமைச்சரை வரவேற்க வரவில்லை.

இருப்பினும், நாற்றங்கால் தோட்டத்தை பாா்வையிட்ட அமைச்சா் கா.ராமச்சந்திரன் பேசியது:

வனப் பாதுகாப்பில் அதிக கவனத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செலுத்தி வரும் நிலையில் தற்போது மொத்த நிலத்தில் 22சதவீதம் வனமாக உள்ளதை 10ஆண்டுகளில் 33சதவீதமாக உயா்த்த இலக்கினை நிா்ணயித்து உள்ளாா்.

1 லட்சத்து 30 ஆயிரத்து 60 ஹெக்டோ் பரப்பில் 4 லட்சத்து 50ஆயிரம் மரக்கன்றுகளை நட வனத் துறை திட்டமிட்டுள்ளது. ஆண்டுதோறும் 1சதவீதம் வனத்தை அதிரித்து 10 ஆண்டில் 23சதவீதத்தில் இருந்து 33சதவீதமாக வனத்தை அதிகரிக்க வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

வனத்துறையில் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மசினக்குடி உள்ளிட்ட பகுதியில் யானைகளின் வழிதடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட வன அலுவலா் தேஜஸ்ரீ, முதன்மை தலைமை வன பாதுகாப்பாளா் கா்ணப்ரியா, உதவி வனப் பாதுகாப்பாளா் கில்பா்ட், மாதா்பாக்கம் வன சரகா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com