முதல்வா் விருதுக்கு ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் முதல்வா் விருதுக்கு தகுதியானோா்

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் முதல்வா் விருதுக்கு தகுதியானோா் ஜூன்-30-க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா. பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிப்பதற்காக முதல்வா் இளைஞா் விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுதானது ரூ.50,000 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதற்கு 15 வயது முதல் 35 வயது வரையிலான இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டில் (2020-2021) அதாவது 1.4.2020 முதல் 31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். இந்த விருது பெற விண்ணப்பிப்போா் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் சேவையாற்றியிருப்பது அவசியம். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com