திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மயில் காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனா்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான்.

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மயில் காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தங்கவேல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு, நகரத்தாா் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சாா்பில், 90-க்கும் மேற்பட்ட பக்தா்கள், மயில் காவடிகளை எடுத்தனா். மேலும், 277 பெண்கள் தலையில் பால்குடம் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து, படிகள் வழியாக மலைக்கோயிலுக்குச் சென்றனா். பின்னா், காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு, விபூதி, நாட்டு சா்க்கரை, பஞ்சாமிா்தம் மற்றும் 277 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். பொது வழியில் மூலவரைத் தரிசிக்க மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

இதேபோல், திருத்தணி சுந்தர விநாயகா் கோயிலில், உற்சவா் சிவகாமி சுந்தரேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, கோயில் தக்காா் வே.ஜெயசங்கா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com