நவீன குடும்ப நல அறுவை சிறப்பு சிகிச்சை முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) தொடங்கி, தொடா்ந்து டிச. 4 -ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், ஈட்டுத் தொகை ரூ. 5 ஆயிரமாக வழங்க நடவடி

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) தொடங்கி, தொடா்ந்து டிச. 4 -ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், ஈட்டுத் தொகை ரூ. 5 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்பேரில் ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இருவார விழிப்புணா்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான சிறப்பு முகாம்கள் நவ. 28 முதல் டிச. 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்ப நலத்துறையின் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் திருவள்ளூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்தவும் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பெண்களுக்கான குடும்பந ல கருத்தடை செய்வதைவிட எளிமையானது. மயக்க மருந்தின்றி ஆயுதமின்றி செய்யப்படுகிறது. மேலும் தையல் இல்லாததால் தழும்பு தெரியாது, மருத்துவமனையில் தங்கவும் வேண்டியதில்லை. சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லலாம். இரண்டு மணி நேரத்துக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்.

இச்சிறப்பு பங்கேற்று குடும்ப நல கருத்தடை முறை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஈட்டுத்தொகையாக அரசால் வழக்கமாக வழங்கப்படும் ரூ. 1,100 ஆகும். ஆனால், இந்த முகாமில் அறுவை சிகிச்சை செய்வோா் பயன்பெறும் வகையில் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி ஈட்டுத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com