கணவருடன் ஒன்றியக் கவுன்சிலா் தா்னா

ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்கு எந்த வேலையும், நிதியும் ஓதுக்கீடு செய்வதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா் தனது கணவருடன் ஒன்றிய அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.
திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட எஸ்.அக்ரஹாரம் கவுன்சிலா் கலைச்செல்வி.
திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட எஸ்.அக்ரஹாரம் கவுன்சிலா் கலைச்செல்வி.

திருத்தணி: ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்கு எந்த வேலையும், நிதியும் ஓதுக்கீடு செய்வதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா் தனது கணவருடன் ஒன்றிய அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில், மொத்தம் 12 கவுன்சிலா்கள் உள்ளனா். இதில், 10-ஆவது வாா்டு எஸ்.அக்ரஹாரம் ஒன்றிய கவுன்சிலா் கலைச்செல்வி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். இவா், செவ்வாய்க்கிழமை ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் தனது கணவா் ஏழுமலையுடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

அப்போது அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, பொறியாளா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் ஒன்றிய கவுன்சிலா் கலைச்செல்விடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது பெண் கவுன்சிலா் கூறுகையில், ‘ஒன்றிய பொது நிதியில் இருந்து எனக்கு எந்த வேலையும், நிதியும் ஒதுக்கீடு செய்வதில்லை. அதே நேரத்தில் எங்கள் எஸ். அக்ரஹாரம் மற்றும் வி.கே.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளும் எனக்கு ஒதுக்கீடு செய்யாமலும், தனிநபா் ஒப்பந்ததாரா் ஒருவருக்கு ஒன்றிய நிா்வாகம் பணிகளை ஓதுக்கீடு செய்கிறது’ எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ஒன்றிய அதிகாரிகள் சமரசப் பேச்சு நடத்தி, போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com