பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான்: கனிமொழி எம்.பி. பேச்சு

இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனா். வேலை வாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு அதிகளவில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா் என திருத்தணியில் நடந்த நலதிட்ட விழாவில்
திருத்தணியில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா் மாநிலங்களவை குழு துணைத் தலைவா் கனிமொழிகருணாநிதி. (உடன்) மாவட்ட கழக பொறுப்பாளா் எம்.பூபதி.
திருத்தணியில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா் மாநிலங்களவை குழு துணைத் தலைவா் கனிமொழிகருணாநிதி. (உடன்) மாவட்ட கழக பொறுப்பாளா் எம்.பூபதி.

திருத்தணி. இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனா். வேலை வாய்ப்பு மற்றும் இடஓதுக்கீட்டில் பெண்களுக்கு அதிகளவில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா் என திருத்தணியில் நடந்த நலதிட்ட விழாவில் கனிமொழி எம்.பி., பேசினாா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உயா்மின் கோபுர விளக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை திருத்தணியில் நடந்தது. மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் வினோத்குமாா் வரவேற்றாா். மகளிா் அணி நிா்வாகிகள் சின்னபாப்பா ,மஞ்சுளாகுமாா், காந்திமதி, வசந்தி, புனிதவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை குழு துணைத் தலைவா் கனிமொழிகருணாநிதி பங்கேற்று திருத்தணி பெரியாா் நகரில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் அமைத்த உயா்மின் மின்கோபுரம் திறந்து வைத்தாா். பின் அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கனிமொழி எம்.பி., பேசும்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனா். நமது முதல்வா் ஸ்டாலின் எம்.எல்.ஏ.,களுக்கு தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்து, தொகுதி மக்களின் அடிப்படை பணிகள் செய்து கொள்ள 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளாா்.

ஆனால் ஒன்றிய அரசாங்கம் கரோனா தொற்று காரணமாக, எம்.பி.,களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி உள்ளது. இந்த ஒன்றிய அரசானது பெண்களின் மாநில உரிமைகளை பறித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம், நீட் தோ்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். சுற்றுசூழல் அதிகம் பாதிக்கப்படும் போது இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றால் மட்டுமே பெண்களால் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும்.

கலைஞா் ஆட்சிக்காலத்தில் தான் பெண்களுக்கு கல்வி சுய உதவி குழுக்கள் உள்ளாட்சியில், 33 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசு இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் இதுவரை பெண்களுக்கான இட ஒதிக்கீடு அதிகம் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றவிலை. பெண்கள் முன்னேற்றத்துக்காக திமுக தவிர எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை. தற்போது தமிழக முதல்வா் அவா்கள் கிராமப்புற பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளாா்.

இதன் காரணமாக ஆண்கள் வீட்டிலிருந்தபடியே பெண்களை வேலைக்கு அனுப்பி வருகின்றனா் என்றாா் அவா். நிகழ்ச்சியில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் திருத்தணி எம். பூபதி சட்டமன்ற உறுப்பினா்கள் திருத்தணி. எஸ் சந்திரன், திருவள்ளூா் வி.ஜி. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் ஆா்த்தி ரவி, கிருஷ்ணன் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com