மதுபானக் கடைகளை 4 முதல் 6 வரை மூட உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் வரும் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை மூட வேண்டும் என ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளூா்: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் வரும் ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை மூட வேண்டும் என ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981, மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-இன் படி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனைச் சாா்ந்த மதுக் கூடங்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் வரும் 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, தொடா்ந்து 6-ஆம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட வேண்டும்.

இதற்கிடையே விதிமுறைகளை மீறி திருட்டுத்தனமாக மதுபானம் விற்றால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com