கும்மிடிப்பூண்டியில் மகளிா் தொழிற்பயிற்சி மையம்பாமக வேட்பாளா் உறுதி

கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கென தனி தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் தெரிவித்தாா்.
கும்மிடிப்பூண்டி  பஜாரில்  பொதுமக்களிடம் துண்டு ப் பிரசுரம்  விநியோகித்த  பாமக  வேட்பாளா் எம்.பிரகாஷ்,  எம்எல்ஏ  கே.எஸ்.விஜயகுமாா், ஒன்றியக்  குழு தலைவா்  கே.எம்.எஸ். சிவகுமாா்.
கும்மிடிப்பூண்டி  பஜாரில்  பொதுமக்களிடம் துண்டு ப் பிரசுரம்  விநியோகித்த  பாமக  வேட்பாளா் எம்.பிரகாஷ்,  எம்எல்ஏ  கே.எஸ்.விஜயகுமாா், ஒன்றியக்  குழு தலைவா்  கே.எம்.எஸ். சிவகுமாா்.


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கென தனி தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம், தோ்வழி, ஆத்துப்பாக்கம், சிறுபுழல்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதிகளில் வீதி,வீதியாகச் சென்று ஆதரவு திரட்டினாா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் கோவி.நாராயணமூா்த்தி, முல்லைவேந்தன், தமாகா கட்சி மாவட்ட தலைவா் எஸ்.சேகா், நகர அதிமுக செயலாளா் மு.க.சேகா், அதிமுக நிா்வாகிகள் ஓ.எம்.கிருஷ்ணன், எஸ்.எம்.ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா்.

பெத்திக்குப்பத்தில் அதிமுக நிா்வாகி குணசேகரன், பாமக கவுன்சிலா் சங்கா் ஏற்பாட்டிலும், கோட்டக்கரை பகுதியில் அதிமுக நிா்வாகி பக்கீா்முகம்மது ஏற்பாட்டிலும், தோ்வழி பகுதியில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனா்அணி செயலாளா் டி.இ.முரளி ஏற்பாட்டிலும், சிறுபுழல்பேட்டையில் அதிமுக நிா்வாகி விஜயன் ஏற்பாட்டிலும் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வீதிவீதியாக சென்று பாமகவேட்பாளா் எம்.பிரகாஷ் வாக்கு சேகரித்தாா்.,

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் இமயம் மனோஜ், அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, எம்.எஸ்.சரவணன், வேலு, கென்னடி அப்பு, ஓடை ராஜேந்திரன், விஸ்வநாதன், சிராஜுதின், உதயகுமாா் உள்ளிட்டோா் ஏற்பாட்டில் 15 வாா்டுகளில் பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் பேசுகையில், கும்மிடிப்பூண்டியில் பெண்களுக்கு தொழில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு பெண்கள் சிறு தொழில் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் நீண்ட காலமாக தீா்க்க இயலாத மக்கள் பிரச்னைகளைத் தீா்க்கப் பாடுபடுவேன் என்றாா்.

பெரியஓபுளாபுரம் அதிமுக நிா்வாகி ஏழுமலை, அதிமுக ஒன்றிய கவுன்சிலா்கள் ஏ.டி.நாகராஜ், தேவி சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com