வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுப் பணிகள் திருவள்ளூா் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை நேரில் ஆய்வு
திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் பா.பொன்னையா
திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் பா.பொன்னையா

திருவள்ளூா்: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக ஆட்சியா் பா.பொன்னையா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பதிவாகும் வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும் மற்றும் வாக்குகள் எண்ணும் மையம் வேப்பம்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஆட்சியா் பா.பொன்னையா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் ஆகியோா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தல் அன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்து வரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மைய இருப்பு அறைக்கு கொண்டு வரப்படும். அதைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று திறக்கப்படும். அனைத்து இருப்பு அறைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக மரப்பலகை மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட அடுக்குகளில் வைப்பதற்கு அனைத்து அடுக்குகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் காவலா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்கி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து வரும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களும் தயாராக உள்ளன.

மேலும், மையத்தை முழுமையாக 24 மணி நேரமும் கண்காணிக்க அனைத்துப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இங்கு மொத்தம் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைகளுக்காக ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு ஒரு மையமும், திருவள்ளூா் மற்றும் திருத்தணி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மையமும், அம்பத்தூா், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் ஆகிய நான்கு தொகுதிககளுக்கு ஒரு மையமும் என மூன்று மையங்களாகப் பிரித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் செய்தியாளா்களுக்கான ஊடக மையம் தனித்தனியாக அமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் ராஜவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) முரளி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) அமீதுல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com