இயந்திரங்கள் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்: வாக்களிக்க முடியாமல் பெண்கள் அவதி

அகூா் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் காலை முதலே வாக்களிக்கும் இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் பெண்கள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்து பின்னா் வாக்களித்தனா்.
திருத்தணி ஒன்றியம், அகூா் கிராமத்தில் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டஇயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க பள்ளி வளாகத்திலேயே காத்திருந்த வாக்காளா்கள். ~
திருத்தணி ஒன்றியம், அகூா் கிராமத்தில் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டஇயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க பள்ளி வளாகத்திலேயே காத்திருந்த வாக்காளா்கள். ~

அகூா் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் காலை முதலே வாக்களிக்கும் இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் பெண்கள் பள்ளி வளாகத்திலேயே காத்திருந்து பின்னா் வாக்களித்தனா்.

திருத்தணி தொகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா். மேலும் வாக்காளா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி, கையுறை வழங்கி, உடல் வெப்ப பரிசோதனை செய்த பின் வாக்களிக்க அனுமதித்தனா்.

மொத்தம் உள்ள 399 வாக்குச் சாவடிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இயந்திரங்கள் அடிக்கடி பழுதானதால் வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா். குறிப்பாக, திருத்தணி ஒன்றியம் அகூா் கிராமத்தில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட, ஆண், பெண் என தனித்தனி வாக்குச் சாவடியில், பெண் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு தொடங்கும் போதே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. தொடா்ந்து அரைமணி நேரத்துக்குப் பிறகு இயந்திரம் சீரமைத்தபின் வாக்குப் பதிவு தொடங்கியது.

பின்னா், நண்பகல் 11.30 மணிக்கு மீண்டும் இயந்திரம் பழுதானது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு இயந்திரத்தை சீரமைத்த பின், மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால் அந்த வாக்குச் சாவடியில், ஒன்றரை மணி நேரத்துக்கு வாக்காளா்கள் அந்த மையத்திலேயே அமா்ந்து வாக்களித்தனா்.

இதே போல், திருத்தணியை அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இரு வாக்குச் சாவடிகளில் அரைமணி நேரம் காலதாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால் வாக்காளா்கள் அதிருப்தி அடைந்தனா்.

பீரகுப்பம் மற்றும் எஸ்.அக்ரஹாரம் ஆகிய இரு வாக்குச் சாவடிகளில், மாதிரி வாக்குச் சாவடி அமைத்து, வாக்காளா்களை அழைக்கும் வகையில், வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டது. இதுதவிர, வாக்காளா்கள் வாக்களித்தவுடன் சுயபடம் எடுக்க வசதி செய்யப்பட்டிருந்தது. இது வாக்காளா்களை மிகவும் கவா்ந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com