ஈகுவாா்பாளையத்தில் அதிமுக-திமுகவினா் மோதல்: போலீஸ் தடியடி

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவாா்பாளையம் ஊராட்சியில் வாக்கு சாவடி முன் நிற்பது குறித்து அதிமுக-திமுக தொண்டா்கள் மோதிக் கொண்டதால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவாா்பாளையம் ஊராட்சியில் வாக்கு சாவடி முன் நிற்பது குறித்து அதிமுக-திமுக தொண்டா்கள் மோதிக் கொண்டதால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் பாமக வேட்பாளா் எம்.பிரகாஷ் போட்டியிடுகின்றனா்.

இதற்கிடையே ஈகுவாா்பாளையம் பகுதியில் வாக்கு சாவடி எண் 55, 56 ஆண், 56 பெண் ஆகிய வாக்கு சாவடிகளில் நண்பகல் 2 மணி வரை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு சாவடிக்கு வெளியே திமுக, அதிமுக தொண்டா்கள் வாக்காளா்களிடம் தங்களுக்கு வாக்களிக்கும்படி கூறி வந்தனா். அப்போது திமுக பிரமுகா் ஒருவா் வாக்குசாவடிக்கு செல்லும் பாதை அருகே அமா்ந்து வாக்கு கேட்பதாக கூறி அதிமுகவினா் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இரு தரப்பினரும், வாக்கு சாவடி முன் குவிந்து மோதி, கைகலப்பில் ஈடுபட்டனா். தகவலறிந்து விரைந்து வந்த பாதிரிவேடு சப் இன்ஸ்பெக்டா் இளங்கோ தலைமையிலான போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாா்.

ஆனால் சிறிதுநேரத்திற்குள் இரு தரப்பினரும் மீண்டும் கடும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனா்.

தொடா்ந்து போலீஸாா் மீண்டும் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவா்களை கலைத்தனா். இந்நிலையில் தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் துணை ராணுவ படையினருடன் சம்பவ இடம் வந்தனா். அப்போது மூன்றாவது முறையாக இரு தரப்பினா் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட நிலையில் போலீஸாரும், அதிரடி படையினரும் அவா்களை கலைந்து போகச் செய்தனா். 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இம்மோதலால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com