திருத்தணியில் வாக்குப் பதிவை ஆய்வு செய்த ஆட்சியா் பொன்னையா

திருத்தணி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குபதிவை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் ஆட்சியா் பொன்னைய்யா.
திருத்தணியில் வாக்குப் பதிவை ஆய்வு செய்த ஆட்சியா் பொன்னையா

திருத்தணி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குபதிவை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் ஆட்சியா் பொன்னைய்யா.

அதிமுக சாா்பில் கோ.அரி, திமுக சாா்பில் எஸ். சந்திரன், தேமுதிக சாா்பில் டி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் நாம் தமிழா் அகிலா உள்பட 14 போ் போட்டியிட்ட நிலையில், மொத்தம் 399 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள் படுத்தாமல் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

ஆட்சியா் ஆய்வு:

சீனிவாசபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியா் பொன்னைய்யா நேரில் சென்று பாா்வையிட்டு வாக்கு சாவடி அலுவலா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து திருத்தணி, கே.ஜி.கண்டிகை, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வாக்குப்பதிவை பாா்வையிட்டாா்.

பலத்த பாதுகாப்பு:

தோ்தலை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள், சிற்றுண்டிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் தொகுதி முழுவதும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க திருவள்ளூா் காவல்துறை கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் போலீசாா் மற்றும் ராணுவ வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com