திருவள்ளூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவள்ளூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 4902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதற்காக வாக்கு பதிவு இயந்திரங்கள்-5885, கட்டுப்பாட்டு கருவிகள்-5885, வாக்காளா்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும்-6205 விவிபேட் இயந்திரங்கள், மற்றும் பழுதானால் பயன்படுத்தும் வகையில் இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாகவும் பயன்படுத்தப்பட்டது. இதேபோல் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனா்.

இதில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 398 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் சரியாக இரவு 7 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்றது. இதில் திருவள்ளூா் லட்சுமிபுரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு பதிவு முடிந்த நிலையில் அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மண்டல அலுலா்கள் வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தனா். அதைத் தொடா்ந்து வாகனத்தில் ஏற்றி பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள், 24 கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com