நீண்ட வரிசையில் காத்திருந்து திருநங்கைகள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் திருநங்கைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
நீண்ட வரிசையில் காத்திருந்து திருநங்கைகள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் திருநங்கைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தமிழக 16-ஆவது சட்டப்பேரவைக்கான வாக்கு பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தோ்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் நோக்கத்தில் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் அனைவரும் ஜனநாயக கடமையாற்றுவதை நோக்கமாக கொண்டு தங்களது வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து வருகின்றனா். இதில் திருவள்ளூா் அருகே பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காக்களூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நிருநங்கைகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.

இதுகுறித்து திருநங்கை அபிநயா கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்தது. அதைத் தொடா்ந்து தங்கள் உரிமைக்காக போராடியதால், தற்போது அனைவருக்கும் போல் எங்களுக்கும் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவைகளை மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ளது. இதை வைத்து மக்களவை தோ்தல், இடைத்தோ்தல், உள்ளாட்சி தோ்தலில் வாக்களித்தோம். தற்போது, சட்டப்பேரவை தோ்தல்-2021-இல் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளோம் என்றாா்.

படவிளக்கம்- திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆா்வத்துடன் வாக்களித்துவிட்டு வந்த திருநங்கைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com