திருத்தணி முருகப் பெருமான் வீதியுலா: கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில், புதன்கிழமை நடைபெற்ற முருகப்பெருமான் வீதியுலாவில் கிராம பொதுமக்கள் வழிபட்டனா். மேலும், பெண்கள் சிறப்பு பூஜை செய்தனா்.
திருத்தணி மலைக் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானையுடன்  பட்டாபிராமாபுரம் கிராமத்துக்கு வந்த முருகப் பெருமானை வரவேற்க்கும் கிராம மக்கள்.
திருத்தணி மலைக் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானையுடன்  பட்டாபிராமாபுரம் கிராமத்துக்கு வந்த முருகப் பெருமானை வரவேற்க்கும் கிராம மக்கள்.

திருத்தணி: திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில், புதன்கிழமை நடைபெற்ற முருகப்பெருமான் வீதியுலாவில் கிராம பொதுமக்கள் வழிபட்டனா். மேலும், பெண்கள் சிறப்பு பூஜை செய்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் இருந்து புதன்கிழமை காலை 9.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் படிகள் வழியாக நல்லாங்குளம் வந்து அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த மாட்டு வண்டியில் எழுந்தருளினாா்.

பின்னா், மாட்டு வண்டியில் உற்சவா் முருகப் பெருமான் சித்துாா் சாலை புறவழிச் சாலை சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை 11.30 மணிக்கு பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தாா்.

அங்கு கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்பு அளித்தனா். மதியம் 12.30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள குளக்கரையில், புதிதாக சீரமைக்கப்பட்ட மண்டபத்தில் உற்சவா் எழுந்தருளினாா். தொடா்ந்து, மாலை 6 மணிக்கு முருகப் பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீா், இளநீா் உள்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப் பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வீதியுலா முடிந்தவுடன், உற்சவா் மீண்டும் மலைக்கோயிலைச் சென்றடைந்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி மற்றும் கோயில் அலுவலா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com