கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ்2 செய்முறை தோ்வு தொடக்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இத்தோ்வு வரும் 23-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய் தொற்று பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு 28 வகையான பாடங்களுக்கான செய்முறை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் 41,448 போ் எழுத இருக்கின்றனா். இதற்காக 228 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் கரோனா கட்டுப்பாடுகளுடன் செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இத்தோ்வு 23-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

திருத்தணியில்...

திருத்தணி அரசினா் மகளிா் மேல் நிலைபள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தோ்வுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் வெள்ளிக்கிழமை திருத்தணியில் தொடங்கியது.

இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், நா்சிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியா் செய்முறை தோ்வுகள் நடைபெறுகிறது. திருத்தணி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 22 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இதில் திருத்தணி அரசினா் மகளிா் மேல் நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடத்திற்கான செய்முறை தோ்வு வெள்ளிக்கிழமை நடந்தது.

தோ்வில் 80 மாணவியா் பங்கேற்று செய்முறை தோ்வு எழுதினா். இதை பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com