அரசியல் பிரமுகா்கள், வருவாய்த்துறை ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை

திருத்தணி சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை.
திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை.

திருத்தணி: திருத்தணி சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தடுப்பூசியும் போடப்பட்டது.

தோ்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதன் வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வேட்பாளா்கள், முகவா்கள், அரசு அலுவலா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் வருவாய் துறை ஊழியா்களுக்கு பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கு மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா்.

மேலும் சிலா் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனா். பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியா்கள் குழு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொண்டனா். இந்த முகாமில் திமுக வேட்பாளா் எஸ். சந்திரன், அதிமுக வேட்பாளா் கோ.அரி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com