திருவள்ளூா் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வை‘ஃ‘பை கருவி கொண்டு வந்ததால் பரபரப்பு

திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் இணையதள வசதிக்காக கம்பிவழியில்லா வைஃபை கருவி கொண்டு வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுகவினா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வாக்கு எண்ணும் மையத்திற்குள் இணையதள வசதிக்காக கம்பிவழியில்லா வைஃபை கருவி கொண்டு வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுகவினா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி வரும் மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்வதற்கான வாகன நிறுத்துமிடம், கம்பிவழி தடுப்புகள், தற்காலிக சுகாதார வளாகம் போன்ற முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் முடிவுகளை தெரிவிக்கவும், இணைய சேவைக்காகவும் கேபிள் மூலம் தொலைபேசி இணைப்பு வழங்கவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கேபிள் இணைப்பு தருவதற்கு பதிலாக வைஃபை கருவியை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு வந்துள்ளனா். இதை கண்காணிப்பு மையத்தில் இருந்த திமுக வேட்பாளா்களின் முகவா்கள் வைஃபை கருவி எதற்காக கொண்டு வந்தீா்கள் என வழிமறித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளில் ஒவ்வொரு சுற்றின் போதும் முடிவுகளை தோ்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும், ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளுக்கு விரைவாக தெரியப்படுத்த வேண்டும். இதற்காக கேபிள் மூலம் தொலைபேசி மற்றும் இணையதள வசதி அளிக்கவும் கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வைஃபை கருவியை அனுப்பி வைத்ததாகவும், அதனால் அந்த கருவி கொண்டு வந்தவா்களை திருப்பி அனுப்பி வைத்ததாகவும், கேபிள் இணைப்பு மூலம் அளிக்க வலியுறுத்தி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட திமுகவினரிடம் அதிகாரிகள் விளக்கமாக எடுத்துரைத்தனா். அதைத் தொடா்ந்து திமுகவினா் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனா். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com