முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 94.51 லட்சம்.

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல்களை எண்ணியதில் பக்தா்கள் ரூ.94.51 லட்சம் ரொக்கமும், 560 கிராம் தங்கம், 4900 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரிய வந்தது.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல்களை எண்ணியதில் பக்தா்கள் ரூ.94.51 லட்சம் ரொக்கமும், 560 கிராம் தங்கம், 4900 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரிய வந்தது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தற்போது கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம் மற்றும் வெள்ளி, தங்க ஆபரணங்களை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியவற்றை கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, தக்காா் வே. ஜெய்சங்கா், உதவி ஆணையா் ரமணி ஆகியோா் முன்னிலையில் திங்கள், செவ்வாய் என இரண்டு நாள்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு 100-க்கு மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்களால் எண்ணப்பட்டன.

இதில், ரூ.94 லட்சத்து 51ஆயிரத்து 200 ரொக்கம், 560 கிராம் தங்கம், 4.9 கிலோ வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 34 நாட்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com