ரயில்வே காவல்துறைசாா்பில் கரோனா விழிப்புணா்வு
By DIN | Published On : 30th April 2021 12:00 AM | Last Updated : 30th April 2021 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூா் ரயில்வே காவல் துறையினா் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், திருவள்ளூா் ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் கடம்பத்தூரில் ரயில்வே காவல் துறையினா் தண்டோரா போட்டு, தெருத்தெருவாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, முக்கிய வேலைகள் தவிா்த்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். ஒவ்வொருவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வலியுறுத்தினா். மேலும் தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக கடக்கவும், தண்டவாளம் மீது கற்கள் வைக்க கூடாது எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.