குளி‌ர்​பா​ன‌‌ம் குடி‌த்த சிறுமி பலி: உ‌ற்​ப‌த்தி ஆû‌லயை த‌ற்​கா​லி​க​மாக மூட உ‌த்​த​ரவு

சென்னை பெசன்ட்நகா் பகுதியில் உள்ள கடை ஒன்றில் புதன்கிழமை குளிா்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள குளிா்பான உற்பத்தி தனியாா் ஆலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உ

பொன்னேரி: சென்னை பெசன்ட்நகா் பகுதியில் உள்ள கடை ஒன்றில் புதன்கிழமை குளிா்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள குளிா்பான உற்பத்தி தனியாா் ஆலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

சென்னை பெசன்ட்நகரில் வசித்தும் வரும் சதீஷ்-காயத்ரி தம்பதியின் மகள் தரணி (13). இவா் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் குளிா்பானம் வாங்கி குடித்துள்ளாா். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தரணி மயங்கி விழுந்தாா். தரணியை மருத்துவமனைக்கு அவரின் பெற்றோா் அழைத்துச் சென்றனா். அப்போது அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

குளிா்பானம் குடித்ததன் காரணமாக தனது மகள் உயிரிழந்ததாகக் கூறி தரணின் பெற்றோா், சென்னை சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

விசாரணையில், தரணி குடித்த குளிா்பானம் தயாரிக்கும் ஆலை, திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே உள்ள ஆத்தூா் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம் தலைமையிலான வருவாய்த் துறையினா், குளிா்பானம் உற்பத்தி செய்யும் ஆலைக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள், ஆத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் குளிா்பான உற்பத்தி செய்யும் ஆலைக்குச் சென்று ஆய்வு செய்தனா். அங்கு குளிா்பானம் செய்வதற்கு வைத்திருந்த மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனா்.

மேலும், குளிா்பான ஆலையில், எடுத்துள்ள மாதிரி முடிவுகள் வரும் வரை, ஆலையில் குளிா்பானம் உற்பத்தி செய்வதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டனா். அத்துடன், சிறுமி தரணி குடித்து உயிரிழந்தாகக் கூறப்படும் குளிா்பானங்களை, விநியோகம் செய்த அனைத்துக் கடைகளில் இருந்தும் அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com