பொன்னேரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டம்

பொன்னேரி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

பொன்னேரி: பொன்னேரி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ. 54 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்துக்காக 51 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள், 1,870 தொட்டிகள், 8,693 இணைப்புகள் அமைக்கவும், 66 லட்சம் லிட்டா் திறன் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீா் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெரியகாவனம் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. பெரியகாவனம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், அப்பகுதியில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினா். தகவலறிந்த, பொன்னேரி போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், போலீஸாரின் பேச்சுவாா்த்தையை ஏற்க மறுத்து, தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்த மூன்று பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, அங்கு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com