கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

புழல் பகுதியில் முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்ததாக, இளைஞருக்கு பொன்னேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புழல் பகுதியில் முன் விரோதம் காரணமாக பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்ததாக, இளைஞருக்கு பொன்னேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சென்னை புழல், ரெட்டைமலை சீனிவாசன் தேருவைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா் (38). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவா் முனுசாமி (33).

இவா்கள் வீடுகளின் முன்பு தண்ணீா் தேங்கி நின்ன் காரணமாக இருவரின் குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இருவரது குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, 22-ஆம் தேதி அதிகாலை முனுசாமியை, ருத்ரகுமாா் கல்லால் தாக்கி கொலை செய்தாராம். அப்போது புழல் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கிளாட்சன் டேவிட் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, ருத்ரகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

இந்த வழக்கு, பொன்னேரியில் உள்ள நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இவ்வழக்கில், ருத்ரகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

இக்கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை முன்வைத்து ருத்ரகுமாருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த, புழல் காவல் நிலைய ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவலா் குழுவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com