பெண்களுக்கான திட்டங்களை விரைந்துநிறைவேற்றுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகள், திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றி வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
பெண்களுக்கான திட்டங்களை விரைந்துநிறைவேற்றுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகள், திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றி வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்தாா்.

இதில், திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி., பங்கேற்று ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசியது:

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் பேருந்தில் மகளிா் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பாலியல் கொடுமைகள் குறித்து பெண்கள், குழந்தைகள் தற்போது வெளிப்படையாகச் சொல்ல முன் வந்துள்ளனா்.

தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைகள், முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறாா். அவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி போல பெண்களுக்கான வாக்குறுதிகள், திட்டங்களை நிறைவேற்றும் முதல்வராக விளங்குகிறாா் என்றாா் கனிமொழி.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவொற்றியூா் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். பொதுவெளியில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பெண்களுக்கு உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க திமுக மாவட்ட செயலாளா்களுக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் பூபதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com