தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் தலைவர் செந்தாமரைக்கண்ணன் 

தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் தலைவர் செந்தாமரைக்கண்ணன் 

தமிழகத்தில் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த காரணிப்பேட்டையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்  அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் கிடங்கு ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது அங்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து 534 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட 18000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிஷ், ரவி, மதன், பாபு உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரிடம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து பிற மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனச் சோதனை உள்ளிட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 
அரசு மதுபான பார்களில் போலி மதுபானங்கள் விற்கக் கூடாது. அப்படி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பார்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தவறு நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திரா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் தற்போது 45 சோதனைச் சாவடிகள் உள்ளன. தேர்தல் காரணமாக மேலும் கூடுதலாக 16 சோதனைச்சாவடிகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துறை சார்பில் அமைக்கப்பட உள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த அதிநவீன சோதனைச்சாவடியும் அடங்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com