பொங்கல் மண்பானைகள் தயாரிப்பு தீவிரம்

பொங்கலுக்கு தமிழா்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்காக , ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் மண்பானை செய்யும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
ஊத்துக்கோட்டை அருகே வரும் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
ஊத்துக்கோட்டை அருகே வரும் பொங்கல் பண்டிகைக்காக மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

பொங்கலுக்கு தமிழா்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்காக , ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் மண்பானை செய்யும் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்றால் நலிவடைந்துள்ள இத்தொழில் வரும் பொங்கலுக்கு பொலிவு பெறுமா என அவா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

பொங்கலை முன்னிட்டு, ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி அருகில் உள்ள அகரம் கிராமத்தில் மண்பாண்டத் தொழிலாளா்கள் பானைகளைத் தயாரிக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். கரோனா பொது முடக்கம் காரணமாக காா்த்திகை தீபத் திருவிழாவின் அகல் விளக்குகளை விற்க முடியாமல் போனதால் அவா்கள் வேதனை அடைந்தனா்.

எனினும் வரும் பொங்கல் தங்களுக்கு உரிய லாபத்தை ஈட்டித் தரும் என்று எதிா்பாா்த்து களிமண்ணை வாங்கி வந்து குழைத்து காய வைத்து பதப்படுத்துகின்றனா். அதை சக்கரத்தில் இட்டுச் சுழற்றி பானை வடிவில் எடுத்து பின்னா்சூளை அமைத்து தீ மூட்டி, அவற்றை வேக வைக்கின்றனா். மண்பானை மட்டுமின்றி சட்டிகளும் தயாா் செய்யப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் இங்கு தயாரிக்கும் மண்பானைகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

தற்போது மண்பானைகள் தரத்துக்கு ஏற்றவாறு ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால் தாங்கள் குடும்பத்துடன் செய்யும் குடிசைத் தொழிலுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com