பூண்டி ஏரியில் நீரியல் ஆய்வகத்திற்கு நீர் கொண்டு செல்லும் சின்ன மதகு உடைப்பு

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் நீரியல் ஆய்வகத்திற்கு நீர் கொண்டு செல்லும் மரத்தினாலா சின்ன மதகு பராமரிப்பின்றி நீர் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. 
பூண்டி ஏரி.
பூண்டி ஏரி.

திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் நீரியல் ஆய்வகத்திற்கு நீர் கொண்டு செல்லும் மரத்தினாலா சின்ன மதகு பராமரிப்பின்றி நீர் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டது. 
இதையடுத்து நீர் வீணாக வெளியேறி அலுவலக வளாகங்களை சூழ்ந்துள்ள நிலையில் மணல் மூட்டைகள் கொண்டு அடைப்பு பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். தற்போது புயல் மற்றும் தொடர் மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 1200 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கு இந்திய அளவில் நீர்த்தேக்க திட்ட பணிகளுக்கு சோதனை செய்து பார்க்கும் வகையில் பூண்டி ஏரியில் நீரியல் நீர்நிலையியல் சோதனை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு பூண்டி ஏரியின் ஷட்டர் எதிரே மரத்தலான சின்ன மதகு அமைக்கப்பட்டுள்ளது. 
இங்கிருந்து ராட்சச குழாய் பதித்து கிணறுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு நிரம்பியதும் நீர்த்தேக்க திட்டத்திற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்வது வழக்கமாகும். இந்த ஆய்வகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைத்த மரத்தலான மதகை ஆறு மாதத்திற்கு ஒரு முறை எண்ணைய் மற்றும் கீரிஸ் தடவி பராமரித்து வர வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது கிடையாது எனவும் கூறப்படுகிறது. இதனால், நீர் அழுத்தம் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் மதகில் வியாழக்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டது. 
அதோடு, அதிகளவில் நீர் சென்றததால் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு நீர் அனைத்தும் வீனாகி வெளியேறி அலுவலக வளாகத்திற்குள் புகுந்தது.
இதையடுத்து தகவலறிந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தனபால், செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து வாகனத்தில் மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு உடைப்பை சரி செய்து அடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பூண்டி ஏரி நீர்த்தேக்கத்தில் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததாலும் ஏற்கெனவே ஷட்டர்கள் வழியாக வீணாக நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நீரியல் நீர் நிலையியல் சோதனை ஆய்வு கூடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் சின்ன மதகு மற்றும் குழாய்களும் நீர் அழுத்தத்தால் உடைந்து 150 கன அடிவரையில் நீர் வெளியேறியது. 
மேலும், இந்த நீர் அனைத்தும் ஆய்வு மைய கட்டடங்களுக்குள் புகுந்துள்ளதால் ஆவணங்கள், சோதனைக்கான கருவிகள் ஆகியவைகள் தண்ணீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com