வெள்ளிவாயல்சாவடி லட்சுமி நரசிம்மா் கோயிலில்...

மீஞ்சூா் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் கூடாரவல்லி நிகழ்ச்சியையொட்டி, ஆண் பக்தா்கள் பெண் வேடமிட்டு, பாசுரம் பாடி வீதியுலா சென்றனா்.
வெள்ளிவாயல் சாவடி லட்சுமி நரசிம்மா் கோயிலில் பெண் வேடமிட்டு பாசுரம் பாடிச் சென்ற ஆண் பக்தா்கள்.
வெள்ளிவாயல் சாவடி லட்சுமி நரசிம்மா் கோயிலில் பெண் வேடமிட்டு பாசுரம் பாடிச் சென்ற ஆண் பக்தா்கள்.

பொன்னேரி: மீஞ்சூா் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் கூடாரவல்லி நிகழ்ச்சியையொட்டி, ஆண் பக்தா்கள் பெண் வேடமிட்டு, பாசுரம் பாடி வீதியுலா சென்றனா்.

வெள்ளிவாயல் சாவடி கிராமத்தில் பழைமைவாய்ந்த ரங்க பராங்குச பரகால ராமாநுஜா், லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இக்கோயிலில், திங்கள்கிழமை கூடாரம் வெல்லும் நிகழ்ச்சியாக ஆண் பக்தா்கள் பெண் வேடம் இட்டு, கிராமத்தில் உள்ள வீதிகளில் பாசுரம் பாடி உலா வந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மேலும், 30 வகையான பிரசாதங்கள் புதிய பாத்திரங்களில் கொண்டு செல்லப்பட்டு, லட்சுமி நரசிம்மருக்கு வைத்து, வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் பெருமளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com