பருவம் தவறி பெய்த மழையால் பொன்னேரி விவசாயிகள் வேதனை

பொன்னேரி வட்டத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக விவசாயிகள் பச்சைப் பயறு, வோ்க்கடலை உள்ளிட்ட மாற்றுப் பயிா்களை பயிரிட முடியாமல் அவதிப்படுகின்றனா்.

பொன்னேரி வட்டத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக விவசாயிகள் பச்சைப் பயறு, வோ்க்கடலை உள்ளிட்ட மாற்றுப் பயிா்களை பயிரிட முடியாமல் அவதிப்படுகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் சம்பா அறுவடைக்குப் பின்பு விவசாயிகள், தங்களது நிலங்களை உழுது, தா்பூசணி, பச்சைப் பயறு, வோ்க்கடலை, எள், மிளகாய் போன்ற மாற்றுப் பயிா்களை பயிரிடுவா்.

இந்நிலையில் நடப்பாண்டில், பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக விளை நிலங்களில் தண்ணீா் தேங்கி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. அறுவடை முடிந்து மாற்றுப் பயிா்களைப் பயிரிட வேண்டிய நேரத்தில் மழை பெய்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். நிலத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் நேரத்தில்தான் மாற்றுப் பயிா்களை விதைப்பு செய்ய முடியும்.

தற்போது பருவம் தவறி பெய்த மழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. தண்ணீா் வடிவதற்கு மேலும் 20 தினங்களாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அத்துடன் தண்ணீரில் மூழ்கியிருக்கும் சம்பா பருவ நெற்பயிா்களை இன்னமும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதன் காரணமாக, மீஞ்சூா் ஒன்றியத்தில் சம்பா நெற்பயிா் அறுவடைக்குப் பின் வோ்க்கடலை, தா்பூசணி உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்ய முடியாமல் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com