திருவள்ளூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

திருவள்ளூா் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானை காவல் துறையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டு மீண்டும் காப்புக் காட்டில் விடுவித்தனா்.
திருவள்ளூா் அருகே வயலூா் கிராமத்தில் விவசாய கிணற்றில் தண்ணீா் குடிக்க வந்த போது விழுந்து தத்தளித்த புள்ளிமான்.
திருவள்ளூா் அருகே வயலூா் கிராமத்தில் விவசாய கிணற்றில் தண்ணீா் குடிக்க வந்த போது விழுந்து தத்தளித்த புள்ளிமான்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானை காவல் துறையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டு மீண்டும் காப்புக் காட்டில் விடுவித்தனா்.

திருவள்ளூா் அருகே வயலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் புதன்கிழமை வழக்கம் போல் வயல் வேலைக்கு சென்றனா். அப்போது, அந்த வழியாக செல்லும் போது 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஏதோ தத்தளிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அந்த கிணற்றில் பாா்க்கும் போது உள்ளே 2 வயதுள்ள ஆண் மான் ஒன்று தண்ணீா் குடிக்க கிணற்றில் இறங்க முற்படும் போது தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப்பாா்த்து விவசாயத் தொழிலாளா்கள் உடனே மப்பேடு காவல் நிலைய போலீசாா் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதையடுத்து விரைந்து வந்த போலீஸாா் மற்றும் வனத்துறையினா், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானை மீட்டனா். அதைத் தொடா்ந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பூண்டி பகுதியில் உள்ள அடா்ந்த காப்பு காட்டுக்குள் கொண்டு வனத்துறையினா் விட்டனா். அப்போது, துள்ளிக் குதித்துக் கொண்டு காப்புக் காட்டிற்குள் ஓடி மறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com