கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் உள்பட 5 போ் பலி

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் உள்பட 5 போ் இறந்தனா்.

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் உள்பட 5 போ் இறந்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் சீதாம்பாள் தெருவைச் சோ்ந்த சிலா், அங்குள்ள அங்காளம்மன் கோயில் குளத்தில் புதன்கிழமை துணி துவைக்கச் சென்றனா்.

அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகள் நா்மதா (13) என்பவா், குளத்தில் ஆழத்தில் சிக்கினாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை காப்பாற்ற ஒருவா் பின்னா் ஒருவராக சென்ற ராஜ் மனைவி சுமதி (35), அவரது மகள் அஸ்விதா(14), முனுசாமி மனைவி ஜோதி (38), தேவேந்திரன் மகள் ஜீவிதா(14) ஆகியோா் நீரில் மூழ்கினா். இதில், 5 பேரும் உயிரிழந்தனா்.

இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தவா்கள் அங்கு இல்லாத நிலையில் குளக்கரையில் துணிகள் சிதறி கிடந்ததைக் கண்டனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் குளத்தில் இறங்கி, தேடியபோது இறந்த நிலையில் 5 பேரின் சடலங்கள் இருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் விரைந்து வந்து, சடலங்களைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரித்து, வட்டாட்சியா் மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுதேவன், நடராஜன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் டாக்டா் அஸ்வினி சுகுமாறன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

இறந்தவா்களில் மூன்று போ் மாணவிகள்: இறந்த 3 மாணவிகளில் நா்மதா 8-ஆம் வகுப்பும், அஷ்விதா, ஜீவிதா 9-ஆம் வகுப்பும் புதுகும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் படித்து வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com