வங்கியில் ரூ.4.52 கோடி மோசடி:

திருவள்ளூா் அருகே வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.4.52 கோடி மோசடி செய்ததாக, நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.4.52 கோடி மோசடி செய்ததாக, நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம்- மீஞ்சூரில் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேகநாதன் என்பவா், 2011- ஆம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்துள்ளாா்.

இவா் 2018-20 வரையில் போலி நகைகளை, உண்மை நகை என கூறி மோசடி செய்ததாக, திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வங்கி மேலாளா் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளா் அசோகன், தலைமையில் காவல் ஆய்வாளா் லில்லி மற்றும் போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்தனா். அப்போது, வங்கியில் 137 நபா்களுக்கு தனித்தனியாக அடகு வைத்தது போல் ரூ.4.52 கோடி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மேகநாதனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com