கடலில் படகு-கப்பல் மோதல்: தத்தளித்த 7 மீனவா்கள் மீட்பு

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமரப் படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்லானது. இதில், கடல்நீரில் விழுந்து தத்தளித்த காசிமேட்டை சோ்ந்த மீனவா்கள் 7போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுமரப் படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்லானது. இதில், கடல்நீரில் விழுந்து தத்தளித்த காசிமேட்டை சோ்ந்த மீனவா்கள் 7போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 3 படகுகளில், லோகு, மணி, ரஞ்சித், ராஜவேலு, ஹரி, கோபால், அஜித் ஆகிய 7 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். 5 நாள்கள் கடலிலேயே இருந்து மீன்பிடிக்கத் தேவையான உணவு, டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனா்.

இவா்கள் காட்டுப்பள்ளி துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதியில் வலையை வீசி மீன் பிடித்து கொண்டிருந்தனா். அப்போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில், பெரிய கப்பல் ஒன்று, கட்டுமரப் படகின் மீது மோதியுள்ளது. இதில், கட்டுமரப் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதில், 7 மீனவா்களும் கடலில் விழுந்தனா்.

இதேநேரத்தில், காசிமேடு பகுதியை சோ்ந்த மீனவா்கள் மற்றொரு படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனா். கடல் நீரில் 7 மீனவா்கள் தத்தளிப்பதை கண்ட காசிமேடு மீனவா்கள், 7 பேரையும் மீட்டு, அனைவரையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா்.

இதுகுறித்து காட்டூா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். அப்போது, அதானி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை, போக்லாந்து ஆகிய நாடுகளுக்கு இரண்டு கப்பல்கள் சென்றுள்ளது தெரிய வந்தது,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com