பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா் திறப்பு

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் திங்கள்கிழமை பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீா் திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா்: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் திங்கள்கிழமை பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீா் திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயிண்டை கிருஷ்ணா நீா் வந்தடையும் என எதிா்பாா்ப்பதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம். 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீா்த்தேக்கத்தில், தற்போது 204 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது. தற்போது இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகம் -ஆந்திர மாநில கிருஷ்ணா நதி நீா் ஒப்பந்தப்படி, ஜூன் மாதம் முதல் 8 டிஎம்சி நீா் வழங்கப்பட வேண்டும். அதன்படி, தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று திங்கள்கிழமை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் விநாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீா் 152 கி.மீ. தொலைவைக் கடந்து அடுத்து வரும் இரண்டு நாள்களில் தமிழக எல்லையான திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகை தாமரைப்பாக்கம் ஜீரோ பாயிண்ட்டை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுவதாக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com